பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்த மேக்ஸ்வெல்; வைரலாகும் காணொளி!

Updated: Wed, Jan 01 2025 23:03 IST
Image Source: Google

பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், இறுதியில் மேக்ஸ் பிரண்டின் அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மேக்ஸ் பிரண்ட் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 77 ரன்களைக் குவித்தார். மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தரப்பில் மார்க் ஸ்டெகெடீ 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் பென் டக்கெட், தாமஸ் ரோஜர்ஸ், சாம் ஹார்பர் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய டேனியல் லாரன்ஸ் 64 ரன்களையும், கேப்டன் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 62 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடி வரும் கிளென் மேக்ஸ்வெல் பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி இன்னிங்ஸின் 17ஆவது ஓவரை டேனியல் லாரன்ஸ் வீசிய நிலையில், அந்த ஓவரின் முதல் பந்தை பிரிஸ்பேன் அணியின் வில் ப்ரெஸ்ட்விட்ஸ் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் லாங் ஆஃப் திசையை நோக்கி ஒரு ஏரியல் ஷாட்டை விளையாடினார். 

Also Read: Funding To Save Test Cricket

மேலும் அவர் அந்த ஷாட்டை முழுமையாக விளையாடியதன் காரணமாக பந்து சிக்ஸர் சென்றது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அத்திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த கிளென் மேக்ஸ்வெல் பவுண்டரி எல்லைக்கு வெளியே சென்ற பந்தை அபாரமாக தாவி தடுத்ததுடன், அதனை எல்லைகுள் வீசி பின்னர் கேட்ச் பிடித்தும் அசத்தினார். இந்நிலையில் கிளென் மேக்ஸ்வெல் பிடித்த இந்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை