அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசிய இஷான் - காணொளி!

Updated: Sun, Jun 19 2022 21:01 IST
WATCH: Ishan Kishan Means Business, Smacks 2 Back-To-Back Sixes In First Over (Image Source: Google)

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காவும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை அடைந்துள்ளது. இந்த நிலையில், தொடரை கைப்பற்றப்போவது யார் என்பதை முடிவு செய்யும் 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி, பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்றுவருகிறது.

இரு அணிகளுமே கடைசி ஆட்டத்தில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. குறைவான பவுண்டரி தூரத்தை கொண்ட பெங்களூரு சின்னச்சாமி மைதானம் பொதுவாக பேட்டிங்குக்கு சாதகமாகவே இருக்கும். இன்றும் அதுபோல பேட்ஸ்மேன்களின் வான வேடிக்கைக்கு தயாராகுங்கள் என்றே வர்ணனையாளர்களும் தெரிவித்தனர்.

போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் கேசவ் மகாராஜ் பவுலிங்கை தேர்வு செய்தார். ஆட்டம் துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மைதானத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் மைதானப் பொறுப்பாளர்கள் ஆடுகளத்தை மழைநீர் படாமல் வழக்கம்போல “கவர்” செய்தனர். 

சில நிமிடங்கள் வெளுத்து வாங்கினாலும் மைதானமே குளமாகும் அளவுக்கு மழை பெய்தது. பின்னர் மழை நின்றவுடன் அந்த தண்ணீரை விரைவாக வெளியேற்றும் பணிகளும் வேகமாக நடைபெற்றன. இதையடுத்து திட்டமிட்டதை விட 50 நிமிடங்கள் தாமதமாக 7.50 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. மேலும் ஒரு ஓவர் குறைக்கப்பட்டு 19 ஓவர்களுக்கு மட்டுமே ஆட்டம் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியானது. 

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷான், கேஷவ் மஹாராஜ் வீசிய முதல் ஓவரின் 2ஆவது மற்றும் மூன்றாவது பந்தை அடுத்தடுத்து சிக்சர்களுக்கு விளாசி அசத்தினார். இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே 16 ரன்களை எடுத்தது.

 

அதன்பின் இரண்டாவது ஓவரை லுங்கி இங்கிடி வீசிய இரண்டாவது ஓவரில் 15 ரன்கள் எடுத்திருந்த இஷான் கிஷான் க்ளீன் போல்டாகி அதிர்ச்சியளித்தார். ஆனாலும் அவர் விளாசிய இரண்டு சிக்சர்கள் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை