மகாராஜ் மாயஜாலத்தில் விக்கெட்டை இழந்த ஷுப்மன் கில் - வைரல் காணொளி!

Updated: Sun, Nov 05 2023 16:17 IST
மகாராஜ் மாயஜாலத்தில் விக்கெட்டை இழந்த ஷுப்மன் கில் - வைரல் காணொளி! (Image Source: Google)

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 37வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும் தென்னாப்பிரிக்கா அணியும் பல பரிட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் புள்ளி பட்டியலில் நம்பர் ஒன் இடத்திற்கு சென்று விடுவார்கள். இதன் காரணமாக இரண்டு அணிகளும் இன்றைய ஆட்டத்தில் வெற்றிக்காக பலப் பரிட்சை நடத்துகின்றன.

மேலும் இவ்விரு அணிகளும் ஏற்கனவே அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் சமீபிரதாய ஆட்டமாக தான் இது நடைபெறுகிறது. எனினும் தோல்வியே தழுவாமல் இந்திய அணி விளையாடி வருவதால் தென்னாப்பிரிக்க அணி கடும் நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா வழக்கம் போல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

24 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஆறு பவுண்டரி இரண்டு இமாலய சிக்சர் என 40 ரன்களை சேர்த்தார். இதனால் ரோஹித் சர்மா சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரபாடா பந்துவீச்சில் அவர் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் ரபாடாவிடம் ஆறாவது முறையாக ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கில் 24 பந்துகளை எதிர் கொண்டு 23 ரன்கள் சேர்த்தார். இதில் 4 பவுண்டரியும், ஒரு சிக்சரும் அடங்கும்.

ஒரு முனையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி கில் பெரிய ஸ்கோர் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கேசவ் மஹராஜ் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அவர் போல்டாகி வெளியேறினார். கேசவ் மஹராஜ் வீசிய அந்த பந்தை ஸ்வீப் செய்வதற்காக வந்த கில் அதனை தவற விட்டதால் அது ஸ்டெம்பை பதம் பார்த்தது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

இதனால் 10.3 ஓவரில் இந்திய அணி 93 ரன்கள் சேர்த்து இரண்டு விக்கெட்டுகளை பறி கொடுத்திருக்கிறது. இது நல்ல தொடக்கமாக பார்க்கப்பட்டாலும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் மிகவும் சிறிய அளவில் இருப்பதால் 350 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி உள்ளது. இந்நிலையில் ஷுப்மன் கில் ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை