T20 WC 2024: இறுதிப்போட்டி குறித்து அன்றே கணித்த கேசவ் மஹாராஜ் - வைரலாகும் காணொளி!

Updated: Sat, Jun 29 2024 14:27 IST
T20 WC 2024: இறுதிப்போட்டி குறித்து அன்றே கணித்த கேசவ் மஹாராஜ் - வைரலாகும் காணொளி! (Image Source: Google)

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது நிறைவு பகுதிக்கு வந்துவிட்டது. பார்படாஸில் இன்று இரவு நடக்கும் இறுதி ஆட்டத்தில், நடப்பு உலகக்கோப்பை தொடரில் தோல்வியையே தழுவாத இந்திய அணியும், தென் ஆப்பிரிக்க அணியும் சாம்பியன் பட்டத்துக்காக மோதுகின்றன. இரு அணிகளுமே இதுவரை ஐசிசி தொடர்களில் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதியதில்லை.

அதுமட்டுமின்றி 2014ஆம் ஆண்டு டி20 அரையிறுதியில் இந்திய அணியுடன் ஒருமுறை மோதிய தென் ஆப்ரிக்கா அதில் தோல்வி அடைந்துள்ளது. இரு அணிகளும் லீக் சுற்று முதல் அரையிறுதி வரை தோல்வியே அடையாமல் இறுதிப்போட்டி வரை வந்துள்ளன. ஒருவேளை இந்தத் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வென்றாலும், தோல்வி அடையாமல் சாம்பியன் வென்ற அணி என்ற பெருமையையும் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி குறித்து தென் ஆப்பிரிக்க அணி வீரர் கேசவ் மஹாராஜ் கடந்த மாதம் கூறிய கணிப்பு குறித்தான காணொளி தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தென் ஆப்பிரிக்க அணி வீரர் கேசவ் மஹாராஜ் விளையாடி இருந்தார். 

அப்போது, அவர் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு எந்த அணி முன்னேறும் என்ற கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த கேசவ் மஹாராஜ், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடும் என தனது கணிப்பை தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் கூறியதை போலவே நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் முன்னேறியுள்ளன.

இந்நிலையில் கேசவ் மஹாராஜின் கணிப்பு குறித்த காணொளியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தங்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருவதுடன், அன்றே கணித்த கேசவ் மஹாராஜ் என்ற பதிவுகளையும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை