ஐபிஎல் 2022: முதல் போட்டியிலேயே அசத்தில் குஜராத் டைட்டன்ஸ்; பந்துவீச்சாளர்கள் வேட்டை!

Updated: Mon, Mar 28 2022 20:18 IST
Image Source: Google

நடப்பு ஐபிஎல் சீசனின் 4ஆம் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டு அணிகளுமே புதிய அணிகள் என்பதால் இந்த ஆட்டத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது.

டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கேஎல் ராகுல், குயின்டன் டி காக் களமிறங்கினர். குஜராத்துக்கு முதல் ஓவரை முகமது ஷமி வீசினார்.

முகமது ஷமி வீசிய முதல் பந்து ராகுல் பேட்டுக்கு அருகே சென்று கீப்பரை அடைந்தது. நடுவர் அவுட் தராததால், குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியா ரிவியூ கேட்டு முறையிட்டார். ரிவியூவில் பந்து பேட்டை உரசிச் சென்றது உறுதி செய்யப்பட்டது. இதனால், ராகுல் முதல் பந்திலேயே 'டக்' அவுட் ஆனார்.

இரண்டு அணிகளுக்குமே ஐபிஎல் கிரிக்கெட்டில் இது ஆட்டம். முதல் ஆட்டத்தின் முதல் பந்து குஜராத்துக்கு அட்டகாசமாகவும் லக்னோவுக்கு சோகமாகவும் அமைந்துள்ளது. 

 

அதேபோல் முகமது ஷமி பவர்பிளேவில் வீசிய முதல் மூன்று ஓவர்களில் கேஎல் ராகுல், குயிண்டன் டி காக், மனீஷ் பாண்டே ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் வருண் ஆரோன் எவின் லூவிஸின் விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 30 ரன்களைச் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை