ரஞ்சி கோப்பை 2022: பிரஷித் கிருஷ்ணா மிரட்டல் பந்துவீச்சு!

Updated: Fri, Feb 25 2022 17:27 IST
Image Source: Google

இந்திய அணியின் வேகப்பந்துவீசசாளர் பிரஷித் கிருஷ்ணா, கடந்த சில மாதங்களாகவே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 6 அடி உயரம், இளம் வயது ஆகியவற்றை பயன்படுத்தி தற்போது சிறப்பாக பந்துவீசி வருகிறார். 

கேப்டன் ரோஹித் சர்மாவே இது போன்ற பந்துவீச்சை பார்த்து நீண்ட காலமாக ஆகிவிட்டது என பாராட்டினார். பிரசித் கிருஷ்ணா கடைசியாக விளையாடிய 4 சர்வதேச ஒருநாள் போட்டியில் 12 விக்கெட்டுகளையும், மொத்தமாக 7 ஒருநாள் போட்டியில் 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் 9 ஓவர் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

தற்போது ரஞ்சி கோப்பையில் விளையாடி வரும் பிரஷித் கிருஷ்ணா அபாரமாக பந்துவீசி வருகிறார். குறிப்பாக தற்போது காஷ்மீர் அணிக்கு எதிராக பிரஷித் கிருஷ்ணா பந்துவீசி வருகிறார். அவரது வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் காஷ்மீர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

28 பந்துகள் இடைவெளியில் பிரஷித் கிருஷ்ணா 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பிரஷித் கிருஷ்ணா ஒருநாள் போட்டியில் பந்தை நன்றாக பவுன்ஸ் செய்து ஸ்விங் செய்வதால், அவருக்கு டெஸ்ட் போட்டியில் விரைவில் வாய்ப்பளிக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் வலியுறுத்தி இருந்தார்.

 

அதற்கு ஏற்றார் போல், பிரஷித் கிருஷ்ணா ரஞ்சி கோப்பையிலும் அபாரமாக விளையாடுகிறார். இதனால் அவர் விரைவில் டெஸ்ட் அணியில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இஷாந்த் சர்மா போன்ற சீனியர் வீரர்களின் இடம் கேள்விக்குறியாகி உள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை