தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களை பட்டியலிட்ட ஷேன் வார்னே!
சர்வதேச கிரிக்கெட்டில் சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோர் பார்க்கப்பட்டுவந்த நிலையில், அந்த பட்டியலில் இப்போது பாகிஸ்தானின் பாபர் அசாமும் இணைந்துள்ளார்.
இவர்களில் ஜோ ரூட் மட்டும் டி20 கிரிக்கெட்டில் ஆடவில்லை. மற்ற அனைவருமே டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்றுவிதமான போட்டிகளிலும் அசத்திவருகின்றனர். இந்நிலையில், சமகாலத்தின் டாப் 5 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் யார் யார் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே தேர்வு செய்துள்ளார்.
அனைத்து கண்டிஷன்களிலும் எல்லாவிதமான பவுலர்களையும் சிறப்பாக ஆடக்கூடிய ஸ்டீவ் ஸ்மித் தான் இந்த லிஸ்ட்டில் நம்பர் 1 என்று ஷேன் வார்னே கூறியுள்ளார்.
இந்த ஆண்டில் மட்டும் 6 சதங்கள் அடித்து, இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிராக அபாரமாக விளையாடி ரன்களை வாரிக்குவித்த, இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தான், ஷேன் வார்னேவின் இந்த பட்டியலில் 2ஆம் இடம் பிடித்துள்ளார்.
3ஆம் இடத்தில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை தேர்வு செய்துள்ளார் ஷேன் வார்னே. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாத இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலியை 4ஆவது சிறந்த டெஸ்ட் வீரராகவும், ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷாக்னேவை 5ஆவது சிறந்த வீரராகவும் பட்டியலிட்டுள்ளார்.
ஆனால் ஷேன் வார்னேவின் டாப் 5 டெஸ்ட் வீரர்கள் லிஸ்ட்டில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.