வார்னே குறித்த தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்த கவாஸ்கர்!

Updated: Tue, Mar 08 2022 13:31 IST
Image Source: Google

ஷேன் வார்னே தனது அனைத்துக் கால சிறந்த பேட்டர்கள் பட்டியலில் சுனில் கவாஸ்கரை சேர்த்ததில்லை, இது கவாஸ்கருக்குள் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கலாம். மேலும் ஆஸ்திரேலியர்கள் மீது கவாஸ்கருக்கு எப்போதும் ஒரு கோபம் உண்டு, காரணம் அந்த அணி நடந்து கொள்ளும் விதம்தான்.

இந்நிலையில் ஷேன் வார்னே இறந்த பிறகு அவரது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்தும், பவுலிங்கிலும் ஒன்றும் கிரேட் இல்லை என்றும் கவாஸ்கர் கூறியது இந்திய ரசிகர்களின் கண்டனங்களையே கிளப்பியது. இதோடு ஆஸ்திரேலிய ஊடகங்களும் கவாஸ்கர் விமர்சனத்தின் கால நேரம் பற்றி கண்டனங்களை எழுப்பியிருந்தன.

சுருக்கமாக 145 டெஸ்ட்களில் 708 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷேன் வார்னேவை கிரேட் பவுலர் இல்லை என்று கூறுவது அசட்டுத் தைரியமும், உலக கருத்துக்கு எதிராக ஒரு மல்லுக்கட்டு கருத்தை தெரிவிக்க வேண்டும் என்ற தேவையின் காரணமாகவும் இருக்கலாம்.

இந்நிலையில் தன் கருத்துக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில், கவாஸ்கர் கூறும்போது, “பின்னோக்கிப் பார்த்தால், அந்தக் கேள்வி கேட்கப்பட்டிருக்கக் கூடாது, எந்த ஒப்பீடு அல்லது மதிப்பீட்டிற்கும் இது சரியான நேரம் அல்ல என்பதால் நான் பதில் சொல்லியிருக்கக் கூடாது" என்று கவாஸ்கர் தனது அறிக்கையை விமர்சித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunil Gavaskar (@gavaskarsunilofficial)

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை