4,4,6,6,6,4 - சாம் கரண் ஓவரை பிரித்து மேய்ந்த டிராவிஸ் ஹெட் - வைரலாகும் காணொளி!

Updated: Thu, Sep 12 2024 09:04 IST
Image Source: Google

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணியானது  3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று சௌத்தாம்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

அதன்படி, முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் மேட்யூ ஷார்ட் மற்றும் ஜோஷ் இங்கிலிஸும் தங்ள் பங்களிப்பை கொத்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ஆஸ்திரேலிய அணியானது 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 23 பந்தில் 59 ரன் எடுத்தார்.

மேலும் மேத்யூ ஷார்ட் 41 ரன்களையும், ஜோஷ் இங்கிலிஸ் 37 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து சார்பில் லிவிங்ஸ்டோன் 3 விக்கெட்டும், சாகிப் மஹ்மூத், ஜோஃப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

அந்த அணியில் லியாம் லிவிங்ஸ்டோன் 37 ரன்களையும், கேப்டன் பிலிப் சால்ட் 20 ரன்களையும் எடுத்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் இங்கிலாந்து அணி 19. 2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சீன் அபோட் 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

 

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியானது 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலையும் பெற்றுள்ளது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் டிராவிஸ் ஹெட் ஒரே ஓவரில் 30 ரன்களை விளாசிய நிகழ்வு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

அந்தவகையில் இன்னிங்ஸை 5ஆவது ஓவரை இங்கிலாந்து வீரர் சாம் கரண் வீச அதனை எதிர்கொண்ட டிராவிஸ் ஹெட் அந்த ஓவரின் முதலிரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விளாசினார். அதன்பின்னரும் தனது அதிரடியை நிறுத்தாத டிராவிஸ் ஹெட் அடுத்தடுத்து ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசியதுடன், கடைசி பந்திலும் பவுண்டரி அடித்து அசத்தினார். இதன்மூலம் அந்த ஓவரில் டிராவிஸ் ஹெட் 30 ரன்களைக் குவித்தார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை