ரஞ்சி கோப்பை: அறிமுக ஆட்டத்தில் சதம் விளாசிய யாஷ் துல்!

Updated: Thu, Feb 17 2022 15:04 IST
Image Source: Google

87 வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது.

இந்த தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. முதலில் குரூப் பிரிவு போட்டிகள் வரும் மார்ச் 18ஆம் தேதி வரையும். பின்னர், மே இறுதியில் நாக் அவுட் சுற்று போட்டிகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுகாத்தியில் நடைபெற்று வரும் குரூப் ஹெச் பிரிவில் தமிழக அணியும், டெல்லி அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தமிழக வீரர்கள் சிறப்பாக பந்துவீச டெல்லி அணியில் துருவ் சோரே 1 ரன்னிலும், ஹிம்மட் சிங் டக் அவுட்டாகியும் வெளியேறினர். இதனால் டெல்லி அணி 7 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்து தடுமாறியது.

இதன் பின்னர், அண்டர் 19 கேப்டன் யாஷ் துல்லும், நிதிஷ் ராணாவும் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். நிதிஷ் ராணா 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய யாஷ் துல் அரைசதம் விளாசினார். தனது அபாரமான ஷாட்கள் மூலம் தமிழக அணிக்கு யாஷ் துல் நெருக்கடி தந்தார்.

தொடர்ந்து பவுண்டரிகளை விளாசிய யாஷ் துல், அபாரமாக சதம் விளாசினார். இறுதியில் 113 ரன்கள் யாஷ் துல் அடித்தார். இதில் 18 பவுண்டரிகள் அடங்கும். யாஷ் துல் ஐபிஎல் தொடரில் டெல்லி அணி 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. 54 ஓவர் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலியும் அண்டர் 19 கிரிக்கெட்டில் விளையாடிய பிறகு ரஞ்சி கோப்பையில் கலக்கினார்.

இதனால் விராட் கோலிக்கு இந்திய அணியில் விரைவில் இடம் கிடைத்தது. தற்போது அதே பாணியில் யாஷ் துல்லும் விளையாட, விரைவில் அவருக்கும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கலாம். இதனால் டெஸ்ட் அணியில் உள்ள சீனியர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. முன்னாள் அண்டர் 19 கேப்டனும், மும்பை அணிக்காக விளையாடும் பிரித்வி ஷா 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை