முன்னாள் வீரருக்கு நன்றி தெரிவித்த அர்ஷ்தீப் சிங்!

Updated: Thu, Nov 03 2022 19:40 IST
'Watching your videos helped me a lot' - Arshdeep Singh acknowledges Irfan Pathan (Image Source: Google)

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அடிலெய்ட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற வங்கதேசம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

முன்னதாக கடைசி ஓவரில் வங்கதேச அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதை வீசப் போவது அனுபவம் மிக்க ஷமியா அல்லது அர்ஷ்தீப் சிங்கா என ரசிகர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது. ஆனால் கேப்டன் ரோகித் சர்மா அந்த ஓவரை அர்ஷ்தீப் சிங்கிடம் வழங்கினார். தமக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய அர்ஷ்தீப், யார்க்கர் பந்து வீச்சை பயன்படுத்தினார்.

இதனால் அந்த ஓவரில் வங்கதேச அணியால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மேலும் அர்ஷ்தீப் சிங் 12ஆவது ஓவரில் ஷகிப் அல் ஹசன், அபீப் ஹோசைன் ஆகியோரது விக்கெட்களை வீழ்த்தியதால்தான், இந்தியாவில் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க செய்ய முடிந்தது. 

இந்நிலையில், இப்போட்டி முடிந்தப் பிறகு, இப்போட்டிக்கு வர்ணனை செய்த முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதானுடன் அர்ஷ்தீப் சிங் தொலைக்காட்சி நேரலையில் பேசினார். அப்போது, ‘‘உங்களுக்கு நன்றி இர்ஃபான். உங்களது பந்துவீச்சு காணொளிகளை பார்த்துதான் பந்துவீச்சில் சில விஷயங்களை கற்றுக்கொண்டேன். ஒரு ஓவரில் 6 பந்துகளையும், டைட்டாக ரன்களை கசிய விடாமல் வீசும் விஷயங்களையும் அதில் இருந்துதான் கற்றுக்கொண்டேன். இதனால்தான், டெத் ஓவர்களில் என்னால், சிறப்பாக செயல்பட முடிகிறது” எனக் கூறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை