ரெய்னாவை நீக்கியது சிஎஸ்கேவின் தோல்விக்கு முக்கிய காரணம் - ரவி சாஸ்திரி!
நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சிஎஸ்கே, இம்முறை எப்போதும் இல்லாத அளவுக்கு புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்தது. சிஎஸ்கேவின் தோல்விக்கு கேப்டன்கள் மாற்றம், வீரர்களின் காயம் என்று பல காரணங்கள் கூற பட்டாலும், ரவி சாஸ்த்ரி கூறியுள்ள கருத்து யோசிக்க வேண்டிய விஷயமாகவே உள்ளது.
இது குறித்து பேசிய ரவி சாஸ்த்ரி, "ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளாக சிஎஸ்கே சிறப்பாக செயல்பட்டது. ஆனால் அதற்கு எல்லாம் ரெய்னாவும் ஒரு காரணம் என்று அவர்கள் மறந்துவிட்டனர். ரெய்னா தனது திறமையை ஐபிஎல் தொடரில் நிரூபித்தவர். ரெய்னா அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். இதனால் சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் ஒரு நிலைத்தன்மை இருக்கம்.
ரெய்னாவின் பேட்டிங் மற்ற வீரர்கள் மீதான அழுத்தத்தை குறைத்துவிடும். இதனை தான் சிஎஸ்கே தற்போது மிஸ் செய்கிறது. ரெய்னா மாதிரி ஒரு வீரர் பேட்டிங் வரிசையில் இருக்கும் போது ராயுடு, ராபின் உத்தப்பா ஆகியோருக்கு தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்த சுதந்திரம் கிடைக்கும்.
தற்போது ரெய்னா மாதிரி ஒரு வீரரை அடுத்த சீசனில் சிஎஸ்கே கண்டுபிடிக்க வேண்டும் என்று ரவி சாஸ்த்ரி கூறினார். ஐபிஎல் தொடரில் தொடர்ந்து அதிக முறை 400 ரன்கள், 300 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்ற சுரேஷ் ரெய்னா, கடந்த சீசனில் மோசமான ஃபார்ம் காரணமாக வெளியே உட்கார வைக்கப்பட்டார்.
ரெய்னா இடத்தில் தான் கடந்த சீசனில் மூன்றாவது வீரராக மொயின் அலியை சிஎஸ்கே களமிறக்கியது. அவரும் அதிரடியாக விளையாட நடுவரிசையில் ராபின் உத்தப்பா, ராயுடு என அனைவரும் கைக் கொடுத்தனர். ஆனால் இம்முறை சில போட்டியில் மொயின் அலிக்கு 3ஆவது வீரராக களமிறங்க வாய்ப்பு தரப்படவில்லை. உத்தப்பாவும் சொதப்பியதால் சிஎஸ்கே நடுவரிசையே சிக்கலானது குறிப்பிடத்தக்கது” என தெரிவித்துள்ளார்.