ஐபிஎல் 2022: வெற்றிக்கு இவர்கள் தான் முக்கிய காரணம் - கேன் வில்லியம்சன்!

Updated: Sat, Apr 16 2022 12:11 IST
Image Source: Google

15வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய ஹைதராபாத் அணி 17.5 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தநிலையில், கொல்கத்தா அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய ஹைதராபாத் அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன், பந்துவீச்சாளர்களே வெற்றிக்கு முக்கிய காரணம் என பாராட்டியுள்ளார்.

இது குறித்து கேன் வில்லியம்சன்,“எங்கள் பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பாக செயல்பட்டனர். கொல்கத்தா பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது. சிறிது பனிப்பொழிவும் இருந்தது எங்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. 

வேகப்பந்து வீச்சாளர்கள் மிக சிறப்பாக செயல்பட்டனர், குறிப்பாக கடைசி ஓவர்களில் மிக சிறப்பாக பந்துவீசினர். மார்கரமும் ராகுல் த்ரிபாட்டியும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். ஒவ்வொரு வீரர்களும் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்ததன் மூலமே இந்த வெற்றி கிடைத்துள்ளது.

இருந்தாலும் இன்னும் ஒரு சில விசயங்களை சரி செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது, தவறுகளை சரி செய்து கொள்வோம்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::