ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப்படைத்த வெஸ்லி மதெவெரே!

Updated: Fri, Mar 24 2023 10:10 IST
Image Source: Google

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நெதர்லாந்து அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியாவில் நடைபெறும் 2023 உலக கோப்பையில் தங்களது இடத்தை பிடிப்பதற்கு வழிவகுக்கும் ஒன்டே சூப்பர் லீக் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நெதர்லாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் மார்ச் 23ஆம் தேதியன்று தலைநகர் ஹாராரேயில் நடைபெற்ற 2வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே சீரான இடைவெளியில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தாலும் 49.2 ஓவரில் போராடி 271 ரன்கள் எடுத்தது.

அதைத்தொடர்ந்து 272 ரன்களை துரத்திய நெதர்லாந்து அணி கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 17 ரன்களை மட்டுமே எடுத்து, ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் சமன்செய்துள்ளது. இதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்கும் இத்தொடரின் கடைசி போட்டி மார்ச் 25ஆம் தேதியன்று நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போட்டியில் காலின் அக்கர்மேன், நிதமனரு மற்றும் வேன் மீக்ரம் ஆகிய 2 பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்த பந்துகளில் கிளீன் போல்ட்டாக்கி டக் அவுட்டாக்கிய வெஸ்லே மாதேவரே 3 பந்துகளில் 3 விக்கெட்டுகளை சாய்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்களை எடுத்த 3ஆவது ஜிம்பாப்வே பந்துவீச்சாளர் என்ற சிறப்பான சாதனை படைத்தார். மேலும் ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட்டில் இது 50ஆஅவது ஹாட்ரிக் விக்கெட்டுகளாகும். 

  • எட்டொ பிரடன்ஸ் : இங்கிலாந்துக்கு எதிராக, ஹாராரே, 1997
  • ப்ரோஸ்பேர் உட்செயா : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2014
  • வெஸ்லே மாதேவரே : நெதர்லாந்துக்கு எதிராக, ஹராரே, 2023*
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை