ஊக்கமருந்து விவகாரத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு 4 ஆண்டுகள் தடை!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரராக இருந்தவர் ஜான் காம்பெல், தற்போது 29 வயதான ஜான் காம்பெல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் 888 ரன்களை எடுத்துள்ளார். அதில் 26 சராசரியில் மூன்று அரை சதங்களை அடித்துள்ளார். 50 ஓவர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். ஐந்து இன்னிங்ஸ்களில் 248 ரன்கள் எடுத்துள்ளார்.
அதிலும் குறிப்பாக அயர்லாந்துக்கு எதிராக வெறும் 137 பந்துகளில் 179 ரன்கள் எடுத்தது அவரது மறக்கமுடியாத இன்னிங்ஸ் ஆகும். அத்துடன் இரண்டு டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் ஜான் காம்பெல் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் கிங்ஸ்டனில் வீட்டில் இருந்த போது ஊக்கமருந்து எதிர்ப்பு சோதனையின் போது ரத்த மாதிரியை வழங்க மறுத்ததாக ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
காம்பெல் ஊக்கமருந்து சோதனைக்கு ஒத்துழைக்காததை அடுத்து ஜமைக்கா ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தின் (ஜாட்கோ) முடிவின்படி, ஜான் கேம்ப்பெல் ஊக்கமருந்து தடுப்பு விதியை மீறியதற்காக நான்கு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளார்.
ஜமைக்கா ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தின் முடிவின்படி, ஜான் காம்பெல் ஊக்கமருந்து தடுப்பு விதியை மீறியதற்காக நான்கு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளார். ஜான் கேம்ப்பெல் ஊக்கமருந்து எதிர்ப்பு விதியை ,ஜாட்கோ விதி 2.3 மீறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.