வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை இதே குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளதால் தற்போது இரு அணி வீரர்களும் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா
- இடம் - குயின்ஸ் பார்க் ஓவல், டிரினிடாட்
- நேரம் - இரவு 7 மணி
போட்டி முன்னோட்டம்
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி முதலாவது ஒருநாள் போட்டியில் 309 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த போதிலும், இறுதியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே த்ரில் வெற்றிபெற்றது.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் தவான், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் என சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அசத்தினர். ஆனால் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் ரன்களை வாரி வழங்குவது அணிக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.
இருப்பினும் யுஸ்வேந்திர சஹால், அக்ஸர் படேல் ஆகியோர் ஓரளவு ரன்களை கட்டுப்படுத்தியுள்ளது அணிக்கு கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. அவர்களுடன் இணைந்து மற்றவர்களும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்திய அணி தொடரை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, கடந்த சில மாதங்களாக ஒருநாள் கிரிக்கெட்டில் படுமோசமாக விளையாடி வந்த நிலையில், இந்தியாவுடனான முதல் ஒருநாள் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளது.
பேட்டிங்கில் கைல் மேயர்ஸ், பிராண்டன் கிங், ஷாய் ஹோப் என முன்னணி வீரர்கள் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். அவர்களுடன் ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், அகீல் ஹொசைன் ஆகியோரும் பந்துவீச்சில் அசத்தி வருவது இந்திய அணிக்கு நெருக்கடியாக அமைந்துள்ளது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 137
- வெஸ்ட் இண்டீஸ் - 63
- இந்தியா - 68
- டிரா - 2
- முடிவில்லை - 4
உத்தேச அணி
வெஸ்ட் இண்டீஸ்- ஷாய் ஹோப், பிராண்டன் கிங், ஷமர் ப்ரூக்ஸ், கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன் (கே), ரோவ்மேன் பவல், அகேல் ஹொசைன், ரொமாரியோ ஷெப்பர்ட், அல்ஸாரி ஜோசப், குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ்.
இந்தியா - ஷிகர் தவான் (கே), ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர் - சஞ்சு சாம்சன்
- பேட்டர்ஸ் - ஷிகர் தவான், ஷுப்மான் கில், பிராண்டன் கிங், ஷமர் புரூக்ஸ்
- ஆல்-ரவுண்டர்கள் - கைல் மேயர்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், தீபக் ஹூடா
- பந்துவீச்சாளர்கள் - அகேல் ஹொசைன், அல்ஜாரி ஜோசப், ஷர்துல் தாக்கூர்