வெஸ்ட் இண்டீஸ் vs நியூசிலாந்து, 3ஆவது டி20 - போட்டி முன்னோட்ட & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sat, Aug 13 2022 14:46 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜமைக்காவில் உள்ள சபினா பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs நியூசிலாந்து
  • இடம் - சபினா பார்க், ஜமைக்கா
  • நேரம் - ஆகாஸ்ட் 15, நள்ளிரவு 12 மணி (இந்திய நேரப்படி)

போட்டி முன்னோட்டம்

நிக்கோலஸ் பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து வங்கதேசம், இந்தியா, நியூசிலாந்து என டி20 தொடர்களை இழந்து கடும் நெருக்கடியான சூழலை சந்தித்துள்ளது.

அதிலும் அந்த அணி தொடர்ந்து பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்துறைகளிலும் சொதப்பி வருகிறது. மேலும் இன்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள் அடுத்தடுத்து ஒற்றையிலக்க ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பியது பெரும் ஏமாற்றம் தரும் விசயமாக உள்ளது.

அதனால் அந்த அணி இனிவரும் போட்டிகளில் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வருகிற டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு சிறந்த அணியை உருவாக்கமுடியும் என்ற கட்டாயத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தாள்ளப்பட்டுள்ளது.

அதேசமயம் நியூசிலாந்து அணி கடந்த சில போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியின் பேட்டிங்கில் மார்ட்டின் கப்தில், டெவான் கான்வே, டெரில் மிட்செல், கிளென் பிலீப்ஸ், ஜேம்ஸ் நீஷன் என அனைவரும் அடுத்தடுத்து அசத்தி வருகிறது.

அதேபோல் பந்துவீச்சில் மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் ஆகியோருடன், இஷ் சோதி, ட்ரெண்ட் போல்ட், டிம் சௌதி ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டுவருவது அணியின் வெற்றிக்கு மிகப்பெரும் உதவியாக அமைந்துள்ளது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 18
  • வெஸ்ட் இண்டீஸ் - 03
  • நியூசிலாந்து - 10
  • முடிவில்லை - 5

உத்தேச அணி 

வெஸ்ட் இண்டீஸ்- கைல் மேயர்ஸ், ஷமாரா புரூக்ஸ், நிக்கோலஸ் பூரன்(கே), டெவோன் தாமஸ், ஷிம்ரோன் ஹெட்மையர், ரோவ்மேன் பவல், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், ஒடியன் ஸ்மித், ஹேடன் வால்ஷ், ஓபேட் மெக்காய்.

நியூசிலாந்து - மார்ட்டின் கப்தில், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன்(கே), க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட்.

ஃபேண்டஸி லெவன்

  •      விக்கெட் கீப்பர் - டெவோன் கான்வே
  •      பேட்டர்ஸ் - மார்ட்டின் கப்டில், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், க்ளென் பிலிப்ஸ்
  •      ஆல்-ரவுண்டர்கள் - டேரில் மிட்செல், ரொமாரியோ ஷெப்பர்ட்
  •      பந்துவீச்சாளர்கள் - ஓபேட் மெக்காய், மிட்செல் சான்ட்னர், மைக்கேல் பிரேஸ்வெல்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை