வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட்: போட்டி முன்னோட்ட & ஃபேண்டஸி லெவன்!
தென் ஆப்பிரிக்க அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட், ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான தென் ஆப்பிரிக்க அணி கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் சென்று பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை (ஜூன்10) செயிண்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் : வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா
- நேரம்: இரவு 7.30 மணி
- மைதானம்: டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானம் செயிண்ட் லூசியா
போட்டி முன்னோட்டம்
வெஸ்ட் இண்டீஸ்
கிரேக் பிராத்வெயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த சில மாதங்களாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜேசன் ஹோல்டன், டேரன் பிரவோ, கிரென் பாவெல், ஷாய் ஹோப் உள்ளிட்ட அனுபவ வீரர்களுடன் அறிமுக வீரர் கைல் மெயர்ஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.
பந்து வீச்சில் ரஹீம் கார்வால், கீமர் ரோச், அல்சாரி ஜோசப் ஆகியோர் எதிரணிக்கும் நிச்சயம் தலைவலியை ஏற்படுத்துவர் என்பதில் சந்தேகமில்லை.
தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்க அணி கடந்த சில ஆண்டுகளாக சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருவது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்து வருகிறது. டி காக், மார்க்ரம், டீன் எல்கர், டெம்பா பவுமா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் அந்த அணியால் சரிவர சிறப்பான ஆட்டத்தைக் கொடுக்க முடியவில்லை.
இருப்பினும் பந்துவீச்சில் ரபாடா, நோர்ட்ஜே, இங்கிடி, ஷம்சி உள்ளிட்டோர் அணிக்கு பலமாக இருந்து வருகின்றனர். இவர்களுடன் கேசவ் மகராஜ் அணியில் இடம் பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்க அணிக்கு சற்று பலத்தைக் கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் தென் ஆப்பிரிக்கா அணி 18 முறையும், வெஸ்ட் இண்டீஸ் அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
உத்தேச அணி
வெஸ்ட் இண்டீஸ்: கிரேக் பிராத்வெயிட் (கே), கிரென் பாவல், நக்ருமா பொன்னர், கைல் மேயர்ஸ், ஜெர்மைன் பிளாக்வுட், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், ராகீம் கார்ன்வால், அல்சாரி ஜோசப், கீமார் ரோச், ஜெய்டன் சீல்ஸ்.
தென் ஆப்பிரிக்கா: டீன் எல்கர் (கே), ஐடன் மார்க்ரம், ரஸ்ஸி வான் டெர் டௌசன், சரேல் எர்வி, குயின்டன் டி காக், டெம்பா பவுமா, வயான் முல்டர், ஜார்ஜ் லிண்டே, கேசவ் மகாராஜ், காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - ஷாய் ஹோப், குயின்டன் டி காக்
- பேட்ஸ்மேன்கள் - கிரேக் பிராத்வெயிட், டீன் எல்கர் , ராஸி வான் டெர் டௌசன், ஐடன் மார்க்ரம்
- ஆல்ரவுண்டர்கள் - ஜேசன் ஹோல்டர்
- பந்து வீச்சாளர்கள் - ராகீம் கார்ன்வால், கிமார் ரோச், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே