டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Wed, Nov 03 2021 22:22 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை அபுதாபியில் நடைபெறும் 35ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை அணிகள் விளையாடுகின்றன. 

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs இலங்கை
  • இடம் - சேக் சயீத் மைதானம், அபுதாபி
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம் 

கீரன் பொல்லார்ட் தலையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி நடப்பு சீசனில் பெரிதளவில் சோபிக்க தவறியுள்ளது. அதனால் அந்த அணி விளையாடிய மூன்று போட்டியில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. 

இருப்பினும் கெயில், லூயிஸ், ஹெட்மையர் ஆகியோர் பேட்டிங்கிலும் டுவைன் பிராவோ, ஆண்ட்ரே ரஸ்ஸல் போன்ற ஆல்ரவுண்டர்கள் இருப்பதும் அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணியும் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி அதில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. மேலும் டி20 உலகக்கோப்பை அரையிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பையும் அந்த அணி இழந்துள்ளது. 

இருப்பினும் ஹசரங்கா, சரித் அசலங்கா ஆகியோர் அபாரமாக விளையாடி வருவதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 14
  • வெஸ்ட் இண்டீஸ் வெற்றி - 7
  • இலங்கை வெற்றி - 7

உத்தேச அணி
வெஸ்ட் இண்டீஸ்-
கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ், ரோஸ்டன் சேஸ், நிக்கோலஸ் பூரன், ஷிம்ரான் ஹெட்மையர், கீரன் பொல்லார்ட் (கே), ஆண்ட்ரே ரஸ்ஸல், ஜேசன் ஹோல்டர், டுவைன் பிராவோ, அக்கேல் ஹோசைன், ரவி ராம்பால்

இலங்கை - பதும் நிஷங்க, குசல் பெரேரா, பானுக ராஜபக்ச, சரித் அசலங்க, அவிஷ்க ஃபெர்னாண்டோ, தசுன் ஷனக (கே), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, மஹீஷ் தீக்ஷன, லஹிரு குமார

Also Read: T20 World Cup 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - நிக்கோலஸ் பூரன்
  • பேட்டர்ஸ் - எவின் லூயிஸ், சரித் அசலங்கா, பானுக ராஜபக்ஷ, பதும் நிஷங்க
  • ஆல்-ரவுண்டர்கள் - டுவைன் பிராவோ, ஜேசன் ஹோல்டர், ரோஸ்டன் சேஸ், வனிந்து ஹசரங்க
  • பந்துவீச்சாளர்கள் - அகேல் ஹொசைன், துஷ்மந்த சமீர.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை