ஐபிஎல் 2021: தோனி மிகச்சிறந்த ஃபினீஷர் என்பது சந்தேகமில்லை - ரிக்கி பாண்டிங் புகழாரம்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் தகுதிச்சுற்றுப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி சிஎஸ்கே 9ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது.
அதிலும் ஆட்டத்தின் கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கேப்டன் தோனி அடுத்தடுத்து 3 பவுண்டரிகளை விளாசியை வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதையடுத்து தோனிக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், பினிஷிங் டச் கொடுத்த தோனியை ரசிகர்கள் கொண்டாடி வர, டெல்லி அணி தலைமை பயிற்சியாளரும், ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டனுமான ரிக்கி பான்டிங் தோனியை புகழ்ந்து பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ரிக்கி பாண்டிங்,'தோனி ஆட்டத்தை முடிப்பதில் சிறந்தவர்களில் ஒருவராக இருந்தார், அதில் எந்த சந்தேகமும் இல்லை. ராயுடு அவுட்டானவுடன் நாங்கள் ஜடேஜாவா அல்லது தோனியா என்று யோசித்துக்கொண்டிருந்தோம், ஆனால் நான் தோனிதான் வருவார் என்று உறுதியாக நம்பினேன்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
தோனிக்கு எதிரான திட்டத்தை நீங்கள் சரியாக செயல்படுத்தவில்லை என்றால் அவர் உங்களை ஆட்டிபடைத்து விடுவார். தோனி ஓய்வு பெற்றதும், கிரிக்கெட் விளையாட்டில் பார்த்த மிகச்சிறந்த பினிஷர்களில் ஒருவராக அவர் நினைவுகூரப்படுவார்” என்று நான் நினைக்கிறேன்.