ஐபிஎல் 2022: டி20 கிரிக்கெட்டில் நான் முக்கிய வீரராக இருக்க மாட்டேன் - கருண் நாயர்!

Updated: Tue, Mar 22 2022 19:50 IST
Image Source: Google

கடந்த 2016இல் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக முச்சதம் அடித்த கருண் நாயர், அதன்பிறகு வாய்ப்புகள் குறைந்து இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். ஐபிஎல் போட்டியிலும் கருண் நாயர் பெரிதாக ஜொலிக்கவில்லை. 

மேலும் ஐபிஎல் தொடரில் இதிவரை 73 ஆட்டங்களில் விளையாடியுள்ள கருண் நாயர், 10 அரைசதங்கள் உள்பட1,480 ரன்கள் எடுத்துள்ளார். 

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரூ. 1.40 கோடிக்கு கருண் நாயரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தேர்வு செய்தது. 

இந்நிலையில் ஐபிஎல் 2022 போட்டி பற்றி ஒரு பேட்டியில் கருண் நாயர் கூறியதாவது, “ஐபிஎல் போட்டியில் என்னை ஒரு முக்கிய வீரராகக் கருத மாட்டார்கள். இதற்குக் காரணம் டி20 கிரிக்கெட்டில் ஓர் அணியில் முக்கிய வீரராக நான் இருக்க மாட்டேன். 

நான் எந்த ஒரு ஆட்டத்தில் நான் அதிக ரன்கள் எடுத்தாலும் என்னை விடவும் இன்னொரு வீரர் அதிக ரன்கள் எடுத்து பெயர் வாங்கிவிடுவார். அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. அணியின் வெற்றிக்காகவே நான் விளையாடுகிறேன். 

என்னை டி20 கிரிக்கெட்டின் சிறப்பு வீரராகப் பார்க்காததற்குக் காரணம், அணியில் எனக்கு வெவ்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டு பல்வேறு நிலைகளில் பேட்டிங் செய்வதுதான். சில நேரங்களில் இது சரியாக அமையும். சில நேரங்களில் சரியாக அமையாது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இந்த வருடம் எனக்குச் சிறப்பாக அமையும் என எண்ணுகிறேன். நான் என்ன செய்யவேண்டும் எனக் கூறுகிறார்களோ அதைச் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தப் போகிறேன்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை