ஐபிஎல் 2021: அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை வீழ்த்தியர் பட்டியல்!

Updated: Fri, Oct 08 2021 12:43 IST
Image Source: Google

கிரிக்கெட் விளையாட்டில் பொதுவாக அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை வீழ்த்துபவர்கள் ரசிகர்களின் நாயகர்களாகப் பார்க்கப்படுவர். அதிலும் டி20 கிரிக்கெட்டில் அதன் மதிப்பே வேறு.

அப்படி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தற்போதுவரை 54 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில் தற்போதுவரை இத்தொடரில் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் குறித்த டாப் 5 பட்டியலை இப்பதிவில் காண்போம்..

அதிக ரன்கள் அடித்தவர் 

1. கேஎல் ராகுல் - 626 ரன்கள்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இவரது பெயர் அதிக ரன்களைச் சேர்த்தவர் பட்டியலில் தவறாமல் இடம்பிடித்து வருகிறது. அதிலும் நடப்பு சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 626 ரன்களைச் சேர்த்து ஆரஞ்ச் தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். இவரது சராசரி 62.60 ஆக உள்ளது.

2. ஃபாஃப் டூ பிளெசிஸ் - 546 ரன்கள்

இப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் சிஎஸ்கேவின் தொடக்க வீரர் ஃபாஃப் டூ பிளெசிஸ் இடம்பிடித்துள்ளார். இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 5 அரைசதங்களை விளாசி 546 ரன்களைச் சேர்த்துள்ளார். இவரது சராசரி 45.50 ஆகும்.

3. ருதுராஜ் கெய்க்வாட் - 533 ரன்கள்

சிஎஸ்கேவின் இளம் அதிரடி தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட், அணியின் வெற்றிக்கு ஒரு துருப்புச்சீட்டாக விளங்கிவருகிறார். அதன்படி நடப்பு சீசனில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 3 அரைசதம் ஒரு சதம் உள்பட 533 ரன்களைச் சேர்த்து அசத்தியுள்ளார். இவரது சராசரி 44.41 ஆக உள்ளது.

4. ஷிகர் தவான் - 501 ரன்கள்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அதிரடி தொடக்க வீரர் ஷிகர் தவான். இவர் நடப்பு ஐபிஎல் சீசனில் 13 போட்டிகளில் விளையாடி 501 ரன்களை சேர்த்துள்ளார். இவரது சராசரி 41.75 ஆகும்.

5. சஞ்சு சாம்சன் - 484 ரன்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன். நடப்பு சீசனில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் ஒருசதம், இரண்டு அரைசதம் என மொத்தம் 484 ரன்களை குவித்துள்ளார். இவரது சராசரி 40.33ஆக உள்ளது. 

அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர் பட்டியல்

1. ஹர்ஷல் படேல் - 29 விக்கெட்டுகள்

ஆர்சிபி அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் ஹர்ஷல் படேல். இவர் நடப்பு சீசனில் மும்பை அணிக்கெதிராக 5விக்கெட்டுகளையும், அதே அணிக்கெதிராக ஒரு ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். நடப்பு சீசனில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்ஷல் படேல் மொத்தமாக 29 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இப்பட்டியலின் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். 

2. ஆவேஷ் கான் - 22 விக்கெட்டுகள்

டெல்லி கேப்பிட்டல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான். நடப்பு சீசனின் தொடக்கத்திலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் இவர், 7.14 எகோனாமியுடன் மொத்தம் 22 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். 

3. ஜஸ்பிரித் பும்ரா - 19 விக்கெட்டுகள்

உலகின் மிகச்சிறந்த டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான பும்ராவிற்கு இப்பட்டியலில் 3ஆம் இடம் கிடைத்துள்ளது. இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் மொத்தம் 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 

4. முகமது ஷமி - 19 விக்கெட்டுகள்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி. இவர் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விளையாடிய 14 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி, இப்பட்டியளில் 4ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

5. அர்ஷ்தீப் சிங் - 18 விக்கெட்டுகள்

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

பஞ்சாப் கிங்ஸ் அணியின் மற்றோரு பிரம்மாஸ்திரம் அர்ஷ்தீப் சிங். நடப்பு சீசனில் டெத் ஓவர்களில் அசத்திய இவர், 12 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார்.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை