இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது பெருமை - ஹர்திக் பாண்டியா!

Updated: Sat, Jun 18 2022 17:07 IST
Image Source: Google

கடந்த 2021 டி20 உலககோப்பை தொடரில் ஹார்திக் பாண்டியாவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாதெமியில் பயிற்சி எடுத்து வந்தார். ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்காக தலைமை தாங்கி கோப்பையை வென்று அசத்தினார். 

இதையடுத்து நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்க டி20 தொடரிலும் ஹர்திக் பாண்டியா தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் வரவுள்ள அயர்லாந்து அணிக்கு எதிராக தொடரில் அவர் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து பேட்டியளித்துள்ள ஹர்திக் பாண்டியா, “நிச்சயமாக அடுத்த தொடரை நான் வழிநடத்துவேன் என இத்தொடரின் தொடக்கத்தில் தெரியும். இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது எப்போதும் பெருமையானது. 7 மாதத்திற்கு முன்பு இப்படியெல்லாம் ஆகுமென யார் நினைத்தார்கள்? சரியான சிந்தனையுடன் கடினமாக உழைத்தால் வாழ்க்கை நிச்சயமாக மாறும்.  

அணிக்கு தேவைப்படும் போது சில ஓவர்களை வீச நான் அப்போதுமே தயாராக இருக்கிறேன். ஒரு அணியில் 6 பவுலர்கள் இருப்பது எப்போதுமே டி20 அணிக்கு முக்கியமானது. 

நான் எப்போதுமே பினிஸிங் ரோலை விரும்புகிறேன். என்னைப் பொறுத்த வரையில் நான் எங்கு விளையாடினாலும் மகிழ்சியாக விளையாடுவேன். எனக்கு சவாலான சூழ்நிலைகள் மிகவும் பிடிக்கும். வந்த முதல் இரண்டு பந்துகளிலே அடிக்க வேண்டுமென்றாலும் அடிப்பேன். எனக்கு பொதுவாகவே சவால்களை எதிர்த்து விளையாடுவது மிகவும் பிடிக்கும்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை