ஹர்திக் பாண்டிய உடல்நிலை குறித்து சபா கரீம் சரமாரி கேள்வி!

Updated: Sat, Sep 25 2021 14:26 IST
'Why Was He Selected': Saba Karim Questions Hardik Pandya's Inclusion In World Cup Squad
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் 2021 போட்டியில் மும்பை அணி இதுவரை விளையாடிய இரு ஆட்டங்களிலும் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா பங்கேற்கவில்லை. பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. எனினும் இதுபற்றி மும்பை அணி தரப்பிலிருந்து அறிவிப்பு எதுவும் வரவில்லை. 

இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி குறித்து இந்திய முன்னாள் வீரர் சபா கரீம் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணிக்காக பாண்டியா தேர்வானபோது முழு உடற்தகுதியுடன் இருந்தாரா? அப்படி உடற்தகுதியுடன் இருந்திருந்தால் அவருடைய தேர்வு சரியே. மும்பை அணிக்காக இரு ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை. அவருக்கு எப்போது காயம் ஏற்பட்டது? இந்திய அணித் தேர்வானபோது ஏற்பட்டதா அல்லது ஐபிஎல் போட்டிக்காகத் தயாராகும்போது ஏற்பட்டதா? சில விஷயங்களை முறையாக அறிவிக்க வேண்டியது அவசியம். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

பாண்டியாவுக்குக் காயம் இருந்திருந்தால் இந்திய அணிக்கு எப்படித் தேர்வானார்? பொதுவான விதிமுறை என்னவென்றால், உங்களிடம் உடற்தகுதி இல்லையென்றால் நீங்கள் நேஷனல் கிரிக்கெட் அகாதமிக்குச் சென்று உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். அதன்பிறகுதான் இந்திய அணிக்குத் தேர்வாக முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை