WI vs ENG, 1st Test (Day 3)- பானர் சதத்தின் மூலம் முன்னிலைப் பெற்றது விண்டீஸ்!

Updated: Fri, Mar 11 2022 11:13 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 311 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பேர்ஸ்டோவ் 109 ரன் எடுத்தார்.

வெஸ்ட் இண்டீசின் ஜேடன் சீல்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார். ஹோல்டர், அல்ஜாரி ஜோசப், கீமர் ரோச் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ்  இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்திருந்தது. நக்ருமா பானர் 34 ரன்னும், ஹோல்டர் 43 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பானர் சதமடித்தார். அவர் 121 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டுக்கு 373 ரன்கள் எடுத்துள்ளது. 

தற்போது வரை வெஸ்ட் இண்டீஸ் அணி 62 ரன்கள் முன்னிலையுடன் நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை