WI vs ENG, 3rd Test (Day 2): சில்வாவின் போறுப்பான ஆட்டத்தால் தப்பிய விண்டீஸ்!

Updated: Sat, Mar 26 2022 11:44 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிரெனாடாவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 204 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஜாக் லீச் 41 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஷகிப் 49 ரன்னும், அலெக்ஸ் லீஸ் 31 ரன்னும் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட், கீமர் ரோச், கைல் மேயர்ஸ், அல்ஜாரி ஜோசப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இந்நிலையில், 2ஆவது நாள் ஆட்டத்தில்வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் ஜான் காம்பெல் 35 ரன்னில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய வீரர்கள் விரைவில் பெவிலியன் திரும்பி ஏமாற்றம் அளித்தனர். 

ஆனால் 8ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஜோஸுவா டி சில்வா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டார்.

இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்துள்ளது. ஜோஷ்வா சில்வா 54 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் 28 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ஓவர்டோன் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை