WI vs PAK : பந்துவீச்சீல் அசத்திய விண்டீஸ்; நிலைத்து நின்ற பாபர்!

Updated: Sun, Aug 15 2021 11:02 IST
WI v PAK, 1st Test: Babar Azam Helps In Pakistan's Recovery After Early Jolts From West Indies (Image Source: Google)

பாகிஸ்தான் - வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் பஹாத் ஆலம் 56 ரன்னும், பஹீம் அஷ்ரப் 44 ரன்களையும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர், சீலஸ் தலா 3 விக்கெட்டும், ரோச் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிராத்வெயிட் 97 ரன்னிலும், ஹோல்டர் 58 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அஃப்ரிடி 4 விக்கெட்டும், அப்பாஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் இம்ரான் பட் டக் அவுட்டானார். அபித் அலி 34 ரன்னில் ஆட்டமிழந்தார். அசார் அலி 23 ரன்னிலும், பவாத் ஆலம் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு விக்கெட் கீப்பர் ரிஸ்வான் ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜொடி 56 ரன்கள் சேர்த்த நிலையில், ரிஸ்வான் 30 ரன்னில் அவுட்டானார்

இதனால் மூன்றாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்துள்ளது. பாபர் அசாம் 54 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரோச், சீலஸ் தலா 2 விக்கெட்டும், ஹோல்டர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை