WI vs ENG, 3rd Test (Day 1, lunch): விண்டீஸ் பந்துவீச்சில் தடுமாறும் இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது.
இத்தொடரில் இதுவரை நடந்த முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் டிராவில் முடிந்த நிலையில், வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கரெண்டாவில் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஸாக் கிரௌலி 7 ரன்னிலும், கேப்டன் ஜோ ரூட் ரன் ஏதுமின்றியும், டேனியல் லாரன்ஸ் 8 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் மறுமுனையில் களமிறங்கிய அலெக்ஸ் லீஸ் பொறுமையாக விளையாடிவருகிறார். அவருடன் தற்போது பென் ஸ்டோக்ஸ் களமிறங்கியுள்ளார்.
இதனால் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்களை மட்டுமே சேர்த்து தடுமாறி வருகிறது.
இங்கிலாந்து தரப்பில் அலெக்ஸ் லீஸ் 26 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் ரன் ஏதுமின்றியும் விளையாடிவருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கைல் மேயர்ஸ் 2 விக்கெட்டுகளையும், கீமார் ரோச் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.