WI vs ENG, 3rd Test: இங்கிலாந்து பந்துவீச்சில் தடுமாறும் விண்டீஸ்!

Updated: Fri, Mar 25 2022 22:22 IST
Image Source: Google

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்த் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரில் 3-2 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளும் டிராவில் முடிந்தது.  

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிரெனாடாவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, விண்டீஸின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 204 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக சாகிப் மஹ்மூத் 49 ரன்களையும், ஜாக் லீச் 41 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட், கீமர் ரோச், கைல் மேயர்ஸ், அல்ஜாரி ஜோசப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரேக் பிராத்வைட் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சமாரா ப்ரூக்ஸ் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜான் காம்பெல் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 35 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்களைச் சேர்த்து திணறிவருகிறது. 

இங்கிலாந்து தரப்பில் கிரேக் ஓவர்டன், சாகிப் மஹ்மூத், பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து 133 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை