WI vs PAK, 2nd Test: பாபர், ஆலம் ஆட்டத்தால் தப்பித்த பாகிஸ்தான்!

Updated: Sat, Aug 21 2021 09:36 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கிய அபித் அலி, இம்ரான் பட், அஷார் அலி ஆகிய முன்னணி வீரர்கள் 3 பேரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதனால் 2 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் திணறியது.

இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் அசாம், பவாத் ஆலம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.

இதனால் பாகிஸ்தான் அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.168 ஆக இருந்தபோது பாபர் அசாம் 75 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து பவாத் ஆலமும் 76 ரன்னில் காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார்.

அதன்பின் ஜோடி சேர்ந்துள்ள முகமது ரிஸ்வான் - ஃபஹீம் அஷ்ரஃப் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இதனால் முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது. ரிஸ்வான் 22 ரன்னும், பஹீம் அஷ்ரப் 23 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச் 2 விக்கெட், சீலஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை