WI vs SA, 2nd Test: நூழிலையில் சதத்தை தவறவிட்ட டி காக்; சொதப்பிய விண்டீஸ்!

Updated: Sun, Jun 20 2021 09:34 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி செயிண்ட் லூசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி  முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களை எடுத்துள்ளது. மேலும் டி காக் 59 ரன்களுடனும், முல்டர் 2 ரன்களுடனும் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த டி காக் 96 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 298 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸை முடிவு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கீமார் ரோச், கைல் மேயர்ஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பாற்றினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப், ஜெர்மைன் பிளாக்வுட் ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். 

இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி 149 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிளாக்வுட் 49 ரன்களையும், ஷாய் ஹோப் 43 ரன்களையும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபாடா, இங்கிடி, மகாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், வியான் முல்டர் 3 விக்கெட்டையும் கைப்பற்றினார். 

இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் பின் தங்கியுள்ளது. இதனால் அந்த அணி ஃபாலோ ஆன் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::