IND vs NZ: இந்திய அணியில் இந்த மாற்றம் தேவை - கவுதம் கம்பீர்!

Updated: Sun, Nov 21 2021 14:45 IST
'Wicket in Kolkata will suit him': Gautam Gambhir (Image Source: Google)

நியூசிலாந்து எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை முதல் இரண்டு போட்டிகளை வென்றதன் மூலம் இந்தியா கைப்பற்றி உள்ளது. இன்று மூன்றாவது கடைசி போட்டி நடைபெறுகிறது. இதில் ஆடும் 11 வீரர்கள் பட்டியலில் இன்னும் களம் இறக்கப்படாத வீரர்களை இறக்கி ஆட்டத்தில் தாரளமாக பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என கம்பீர் யோசனை கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில் கம்பீர் கூறுகையில், “டி20 தொடரில் ஜெய்பூர், ராஞ்சி என இரண்டு போட்டிகளிலும் விளையாடிய புவனேஷ்குமாருக்கு இந்த 3ஆவது போட்டியில் ஓய்வு கொடுத்துவிடலாம். அவருக்கு பதிலாக ஆவேஷ் கானை விளையாட வைக்கலாம். ஐபிஎல் 2021 போட்டித் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் 2ஆவது இடத்தில் இருக்கிறார் ஆவேஷ் கான்.

மேலும், கொல்கத்தா மைதானத்துக்கு ஏற்ற பவுலர் ஆக ஆவேஷ் கான் இருப்பார். அந்த மைதானத்தில் ஆவேஷ்-க்கு ஏற்றபடி பந்துகள் நன்றாக பவுன்ஸ் ஆகும். அதனாலே, கொல்கத்தா போட்டியில் ஆவேஷ் கான் விளையாட வேண்டும் என நான் விரும்புகிறேன். ஏற்கெனவே நம் அணியினர் தொடரைக் கைப்பற்றிவிட்டனர். இந்த ஒரு மாற்றத்தால் திறன் அறியும் சோதனையையும் நடத்திக் கொள்ளலாம்.

Also Read: T20 World Cup 2021

அதற்காக, போட்டியை இழந்தாலும் பரவாயில்லை என்று நான் சொல்லவில்லை. கோப்பை உறுதி என்றாலும் இன்றைய 3ஆவது போட்டியையும் கருணையே இல்லாமல் அதிரடியாக விளையாட வேண்டும் என்றே நம் வீரர்களைக் கேட்டுக்கொள்வேன். அழுத்தத்தோடு விளையாட வேண்டியது இல்லை” எனக் கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை