தேவை ஏற்படும் போதெல்லாம் விக்கெட் கீப்பர் ரோலை செய்துவருகிறேன் - கேஎல் ராகுல்!

Updated: Mon, Dec 05 2022 11:04 IST
Image Source: Google

வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது. கடைசி விக்கெட்டை வீழ்த்த கிடைத்த கேட்ச்களை இந்திய வீரர்கள் தவறவிட்டதாக தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அதேபோல் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் நீண்ட நாட்களுக்கு பின் களமிறங்கினர். அவர் சிறப்பாக பேட்டிங் செய்தபோதும், கீப்பங்கில் செய்த தவறால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து கேஎல் ராகுல் கூறுகையில், “கடந்த 6 முதல் 7 மாதங்களாக இந்திய அணி பெரியளவில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை. 2020ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணிக்காக விக்கெட் கீப்பிங் செய்துள்ளேன். அதேபோல் மிடில் ஆர்டரிலும் தொடர்ந்து விளையாடி வந்துள்ளேன். ரிஷப் பந்த் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டது எனக்கு தெரியாது.

அதனால் ரிஷப் பந்த் ரோலை செய்ய வேண்டும் என்று இந்திய அணி என்னை கேட்டுக்கொண்டது. இனி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்த ரோலை செய்வேன் என்று நினைக்கிறேன். இன்று அணி கேட்டுக் கொண்டதால், மீண்டும் பழைய ஆட்டத்திற்கு திரும்பியுள்ளேன். கடந்த சில நாட்களாக நடந்த பயிற்சிகளில், டைமிங்கில் அதிக கவனம் செலுத்தினேன். அதற்கு முதல் போட்டியிலேயே பலன் கிடைத்துள்ளது.

மெஹதி ஹசன் சிறப்பாக விளையாடினார். சில ரிஸ்க்-களையும் பேட்டிங்கின் போது எடுத்தார். வெற்றிக்கு 30 ரன்கள் மட்டுமே தேவை இருக்கும் போது, ஒரு பவுண்டரி கூட எதிரணியை பிரஷரில் தள்ளிவிடும். அதனை மெஹதி ஹசன் சரியான பயன்படுத்தி கொண்டார். 

அதேபோல் கேட்ச் வாய்ப்புகளையும் தவறவிட்டோம். களத்தில் கேட்ச்களை கோட்டைவிடுவது சாதாரணம்.ஆனால் வங்கதேசம் கடைசி வரை போராடி வெற்றிபெற்றுள்ளது. இந்த தோல்வியை பாடமாக எடுத்துக் கொண்டு கம்பேக் கொடுப்போம்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரிஷப் பந்த் தொடர்ந்து விளையாடி வருவதால், மருத்துவக் குழு அளித்த பரிந்துரை அடிப்படையில், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. இதே போன்று, டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை