இந்திய vs பாக்,: மார்ச் 19-ல் பேச்சுவார்த்தை!

Updated: Tue, Mar 15 2022 18:44 IST
Will take up four-nation proposal with Ganguly at ACC meeting: Ramiz Raja (Image Source: Google)

ஐசிசி நடத்தும் தொடர்களை தவிர்த்து இந்தியா - பாகிஸ்தான் அணிகள் எந்தவித தொடரிலும் மோதி கொள்வதே கிடையாது. அரசியல் ரீதியான பிரச்சினைகள் காரணமாக ரசிகர்களும் இரு நாட்டு போட்டிகளை காண ஏக்கத்துடன் உள்ளனர்.

இந்த ஏக்கத்தை போக்குவதற்காக தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சுவாரஸ்ய முடிவை எடுத்தது. அதாவது ஆண்டிற்கு ஒரு முறை இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளுக்கு இடையே மட்டும் போட்டி நடைபெறும் வகையில் டி20 கிரிக்கெட் தொடர் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தது.

இதுகுறித்து சமீபத்தில் பேசியிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஸ் ராஜா, 4 அணிகளும், ஒவ்வொரு ஆண்டில் இந்த தொடரை தொகுத்து வழங்கலாம் எனக் கூறியுள்ளார். மேலும் ஐசிசியிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், விரைவில் ஒப்புதல் கிடைக்கும் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் அதற்காக இந்தியா - பாகிஸ்தான் நேரடியாக பேசிக் கொள்ளவுள்ளன. வரும் மார்ச் 19ஆம் தேதியன்று ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்தாண்டுக்கான ஆசியக்கோப்பை நடத்த இந்த கூட்டம் கூடுகிறது. இதற்காக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி - செயல் தலைவர் ஜெய்ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் தான் இரு நாட்டு வாரியங்களும் ஆலோசனை நடத்தவுள்ளன.

இதனை ரமிஸ் ராஜா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதில், 4 நாட்களுக்கான போட்டி தொடர் குறித்து பிசிசிஐ-யிடம் பேசவுள்ளோம். அதில் ஒரு சுமூகமான முடிவு எடுக்கப்பட்டு ரசிகர்களுக்கு நற்செய்தி அறிவிப்பேன் எனக் கூறியுள்ளார். இதனால் அடுத்தாண்டு முதல் அந்த தொடரை எதிர்பார்க்கலாம்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை