டி20 உலகக்கோப்பை: சாதனையை சமன் செய்த வில்லியம்சன்!

Updated: Sun, Nov 14 2021 22:07 IST
Image Source: Google

ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன்னின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்களைச் சேர்த்தது. இதில் கேன் வில்லியம்சன் 85 ரன்களைச் சேர்த்தார். 

இதன்மூலம் டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோரையும் சமன்செய்துள்ளார். முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸின் மார்லன் சாமுவெல்ஸ் 85 ரன்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. 

Also Read: T20 World Cup 2021

தற்போது நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் அதனை சமன்செய்துள்ளார். அதேபோல் நியூசிலாந்து அணிக்காக 2ஆயிரம் டி20 ரன்களைக் கடந்த மூன்றாவது வீரர் எனும் பெருமையையும் கேன் வில்லியம்சன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை