கேன் வில்லியம்சன்னுக்கு கரோனா உறுதி; நியூசிலாந்துக்கு பெரும் பின்னடைவு!

Updated: Fri, Jun 10 2022 11:21 IST
Image Source: Google

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. லண்டன் லார்ட்ஸில் நடந்த முதல் டெஸ்ட்டில் ஜோ ரூட்டின் அபாரமான சதத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

பென் ஸ்டோக்ஸின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி புத்துணர்ச்சி பெற்று சிறப்பாக விளையாடிவரும் நிலையில், நியூசிலாந்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஆல்ரவுண்டர் காலின் டி கிராண்ட்ஹோம் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார்.

இந்நிலையில், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு எடுத்த ரேபிட் ஆண்டிஜன் டெஸ்ட்டில் கரோனா பாசிட்டிவ் என்று வந்துள்ளது. எனவே அடுத்த 5 நாட்களுக்கு அவர் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். அதனால் இன்று நாட்டிங்காமில் தொடங்கும் 2ஆவது டெஸ்ட்டில் அவர் ஆடமாட்டார். 

கேன் வில்லியம்சன் ஆடாதது நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமல்லாது, கேப்டனாகவும் அவரை நியூசிலாந்து அணி இந்த டெஸ்ட்டில் ரொம்ப மிஸ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை