இந்தியாவுடனான வெற்றி எங்களுக்கு உத்வேகமளித்தது - சோயிப் மாலிக்!

Updated: Tue, Nov 02 2021 11:25 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் 1-இல் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து அணி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

அதேசமயம் குரூப் 2 இல் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் அணியின் ஏறத்தாழ அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. இந்நிலையில், இந்திய அணிக்கெதிரான வெற்றியே எங்களை உத்வேகப்படுத்தியது என பாகிஸ்தான் அணியின் அனுபவ வீரர் சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், ”உண்மையைச் செல்லவேண்டுமென்றால், ஒரு பெரிய அணிக்கெதிரான போட்டியில் நீங்கள் வெற்றிபெறும் போது அது உங்களுக்கு உத்வேகத்தை அளிக்கும். 

அது எங்களுக்கு இந்திய அணிக்கெதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் கிடைத்தது. ஆனால் நான் அணியில் சேர்ந்ததில் இருந்து, பாகிஸ்தான் அணியின் பயிற்சி அமர்வுகள் மற்றும் உலக நாடுகளின் அழுத்தத்தை அவர்கள் தற்போது வரை சமாளித்து வரும் விதம், விதிவிலக்காக உள்ளது.

Also Read: T20 World Cup 2021

மேலும், பாகிஸ்தான் டிரஸ்ஸிங் ரூமில் நிலைத்தன்மையைப் பார்ப்பது, அதுவே எனக்கு இதுவரை பெரிய விஷயமாக இருந்தது, எல்லோரும் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டிருக்கிறார்கள். மேலும் இது ஒரு குழு விளையாட்டு. நீங்கள் ஒரு குழு விளையாட்டை விளையாடும் போது, உங்களுக்கு உங்கள் அணியினரின் உதவி தேவை, உங்கள் நிர்வாகத்திடம் இருந்து உங்களுக்கு நிறைய ஆதரவு தேவை. மேலும் இவை அனைத்தும் வருவதை நான் காண்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

அதிகம் பார்க்கப்பட்டவை