WIW vs PAKW, 1st T20I: வெஸ்ட் இண்டீஸ் அணி த்ரில் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் மகளிர் அணி 3 டி20, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி ஆண்டிகுவாவில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஹேலே மேத்யூஸ் - டியாண்ட்ரா டோட்டின் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர்.
பின் 32 ரன்களில் மேத்யூஸ் ஆட்டமிழக்க, 31 ரன்னில் டோட்டினும் நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகள் சரிவர விளையாடாததால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களை எடுத்தது வெஸ்ட் இண்டீஸ்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணி தொடக்கம் முதலே எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினு 7ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஆயிஷா நசீம் அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல போராடினார். ஆனாலும் மற்ற வீராங்கனைகள் உதவாததால் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 126 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது.