WIW vs PAKW: டெய்லர் சதத்தால் பாகிஸ்தானை பந்தாடிய வெஸ்ட் இண்டீஸ்!

Updated: Thu, Jul 08 2021 12:33 IST
Image Source: Google

பாகிஸ்தான் மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுபயணம் செய்து 3 ஒருநாள், டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முனீபா அலி - ஆயிஷா ஸஃபர் இணை சிறப்பான தொடக்கத்தை தந்தனர். இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸஃபர் 46 ரன்னிலும், அலி 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிடா தார் மட்டும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். மற்ற வீராங்கனைகள் நிலைத்து விளையாடததால், 50 ஓவரில் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஸ்டாஃபனி டெய்லர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்க வீராங்கனைகள் மேத்யூஸ், நைட், கிசியா நைட் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்டாஃபனி டெய்லர் 6 சர்வதேச சதத்தை விளாசி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். 

இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 47.5 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்திய ஸ்டாஃபனி டெய்லர் ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை