வங்கதேச தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிப்பு!

Updated: Thu, Jan 09 2025 22:15 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, அதன்பின் நடபெற்ற ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளிலும் படுதோல்வியைச் சந்தித்து 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆனது. 

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அடுத்ததாக சொந்த மண்ணில் நடைபெறும் வங்கதேச மகளிர் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது எதிர்வரும் ஜனவரி 19ஆம் தேதியும், டி20 தொடரானது ஜனவரி 27ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. மேலும் இந்த அனைத்து போட்டிகளும் செயின்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி ஹெய்லி மேத்யூஸ் தலைமையிலான இந்த அணியில் ஷமைன் காம்பெல் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் காயத்தால் அவதிப்பட்டு வரும் ஸ்டெஃபானி டெய்லருக்கு இந்த தொடரிலும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக செர்ரி ஆன் ஃப்ரேசர் மற்றும் ஜானிலியா கிளாஸ்கோ ஆகிய அறிமுக வீராங்கனைகளுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக இந்த வாய்ப்பை பெற்றுள்ளானர். இதுதவிர்த்து டியாண்டிரா டோட்டின், கியானா ஜோசப், ஸைதா ஜேம்ஸ், கரிஷ்மா ராம்ஹரக், அஃபி ஃபிளெட்சர் உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகளும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர். 

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி: ஹீலி மேத்யூஸ் (கேப்டன்), ஷெமைன் கேம்பல் (துணை கேப்டன்), ஆலியா ஆலெய்ன், நெரிசா கிராஃப்டன், டியாண்ட்ரா டோட்டின், அஃபி ஃபிளெட்சர், ஷபிகா கஜ்னபி, சினெல்லே ஹென்றி, ஸைதா ஜேம்ஸ், கியானா ஜோசப், மாண்டி மங்ரு, ஆஷ்மினி முனிசார், கரிஷ்மா ராம்ஹாராக், செர்ரி ஆன் ஃப்ரேசர், ஜானிலியா கிளாஸ்கோ.

Also Read: Funding To Save Test Cricket

வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச மகளிர் தொடர் அட்டவணை

  • ​முதல் ஒருநாள் போட்டி, ஜனவரி 19, 2025, வார்னர் பார்க், செயிண்ட் கிட்ஸ்
  • ​2வது ஒருநாள் போட்டி, ஜனவரி 21, 2025, வார்னர் பார்க், செயிண்ட் கிட்ஸ்
  • ​மூன்றாவது ஒருநாள் போட்டி, ஜனவரி 24, 2025, வார்னர் பார்க், செயிண்ட் கிட்ஸ்
  • ​முதல் டி20, ஜனவரி 27, 2025, வார்னர் பார்க், செயிண்ட் கிட்ஸ்
  • ​2வது டி20, ஜனவரி 29, 2025, வார்னர் பார்க், செயிண்ட் கிட்ஸ்
  • ​மூன்றாவது டி20, ஜனவரி 31, 2025 , வார்னர் பார்க், செயிண்ட் கிட்ஸ்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை