மகளிர் ஆசிய கோப்பை 2024: நிதா தார் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

Updated: Sun, Jun 30 2024 23:10 IST
மகளிர் ஆசிய கோப்பை 2024: நிதா தார் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு! (Image Source: Google)

மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூலை 19ஆம் தேதி முதல் இலங்கையில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாள், யுஏஇ, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய அணிகள் பங்கேற்கொற்கவுள்ளன. அதன்படி ஜூலை 19ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது ஜூலை 28ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

மேலும் இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் இரு குழுக்களாக பிரிந்து லீக் சுற்றில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதன்படி இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாள் மற்றும் யுஏஇ அணியும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதில் லீக் சுற்றின் முடிவில் குரூப் அட்டவணையில் டாப் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இத்தொடருக்கான அட்டவணையையும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் யுஏஇ மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் இந்திய அணி ஜூலை 19ஆம் தேதி தங்களுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி நிதா தார் பாகிஸ்தான் மகளிர் அணியை வழிநடத்தவுள்ளார். மேலும் இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியில் நடாலியா பர்வேஸ், ரமின் ஷமிம், உம்-இ-ஹானி மற்றும் வஹீதா அக்தர் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் கடந்த சில ஆண்டுகளாக அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்து வந்த இராம் ஜாவெத், ஒமைமா சோஹைல். அரூஃப் ஷா மற்றும் அறிமுக வீராங்கனை தாஸ்மியா ரூபாப் ஆகியோருக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

பாகிஸ்தன் மகளிர் அணி: நிதா தார் (கேப்டன்), அலியா ரியாஸ், டயானா பெய்க், ஃபாத்திமா சனா, குல் ஃபெரோசா, இராம் ஜாவேத், முனீபா அலி, நஜிஹா அல்வி, நஷ்ரா சந்து, ஒமைமா சோஹைல், சாதியா இக்பால், சித்ரா அமீன், சையதா அரூப் ஷா, தஸ்மியா ரூபாப், துபா ஹாசன்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை