மகளிர் ஆஷஸ் 2022: ஹெய்னஸ், லெனிங் அதிரடி; வலிமையான நிலையில் ஆஸி!
ஆஸ்திரேலிய மகளிர் - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி கான்பெர்ராவில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் அலிசா ஹீலி, பெத் மூனி, எல்லிஸ் பெர்ரி என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ரேச்சல் ஹெய்னஸ் - மெக் லெனிங் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இருவரும் சதமடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹெய்னஸ் 86 ரன்களிலும், மெக் லெனிங் 93 ரன்னிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த தஹிலா மெக்ராத் - ஆஷ்லே கார்ட்னர் இணை அதிரடியாக விளையாடியது. இதில் இருவரும் அரைசதம் கடந்தனர்.
இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 7 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 327 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது. அந்த அணியில் சதர்லேண்ட் 7 ரன்களுடன் களத்தில் உள்ளார். இங்கிலாந்து தரப்பில் ஸ்கைவர், ப்ரண்ட் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.