மகளிர் உலகக்கோப்பை 2022: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆறாவது வெற்றியைப் பெற்றது ஆஸ்திரேலியா!

Updated: Tue, Mar 22 2022 11:19 IST
Women's CWC 2022: Meg's masterclass helps Australia cruise past South Africa (Image Source: Google)

மகளிர் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு லீ - லாரா வோல்வார்ட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் லீ 36 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வோல்வார்ட் 90 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். 

பின்னர் கேப்டன் சுனே லூஸ் தனது பங்கிற்கு அரைசதம் விளாசி அசத்தினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்களைச் சேர்த்துள்ளது.

இதையடுத்து இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

இருப்பினும் கேப்டன் மெக் லெனிங் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன், சதமடித்தும் அசத்தினார். மேலும் 130 பந்துகளில் 135 ரன்களைச் சேர்த்தார். 

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 45.2 ஓவர்களில் இலக்கை அடைந்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து தங்களது 6 ஆவது வெற்றியைப்  பதிவுசெய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை