மகளிர் உலகக்கோப்பை 2022: வங்கதேசத்திற்கு 230 ரன்கள் இலக்கு!
உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டிகளில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறும்
இந்நிலையில், ஹாமில்டன் நகரில் இன்று தொங்கிய 22 ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணியும் வங்கதேச அணியும் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்,
இதில் ஸ்மிருதி மந்தனா 30 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த ஷஃபாலி வர்மா 42 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதையத்தொடர்ந்து களமிறங்கிய யஷ்திகா பாட்டியா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார்.
இறுதியில் பூஜா வஸ்த்ரேகர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களைச் சேர்த்துள்ளது. வங்கதேச அணி தரப்பில் ரிட்டு மோனி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.