Indian Womens Cricket Team: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த யஷ்திகா பாட்டியா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதன் ஒருபகுதியாக இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் ஒருநாள் தொடரை எதிர்கொள்வதுடன், அதன்பின் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ளது. மேலும் இத்தொடர்களுக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அறிவிக்கப்பட்ட இந்த இந்திய மகளிர் அணியில் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ஹர்லீன் தியோல் ஆகியோருடன் ரேணுகா சிங், அருந்ததி ரெட்டி உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகளும் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் இளம் வீராங்கனைகளான ஸ்ரீ சாரணி, கிராந்தி கவுட் ஆகியோரும் இரு தொடர்களுக்குமான அணியிலும் இடம்பிடித்துள்ளனர்.
அதேசமயம் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள சயாலி சத்கரே, உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அமஞ்சோத் கவுர் உலகக்கோப்பை அணியில் வய்ப்பு பெற்றுள்ளார். அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷஃபாலி வர்மா ஆஸ்திரேலியா மற்றும் உலகக்கோப்பை தொடருக்கான அணியில் வாய்ப்பு வழங்கப்படாதது பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணி பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி நட்சத்திர வீராங்கனை யஷ்திகா பாட்டியாக் காயம் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இளம் வீராங்கனை உமா சேத்ரி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் அவர் ஆஸ்திரேலிய தொடருக்கான அணியிலும் இடம்பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), பிரத்திகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரேணுகா சிங் தாக்கூர், அருந்ததி ரெட்டி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), கிராந்தி கவுட், சாயாலி சத்கரே, ராதா யாதவ், ஸ்ரீ சாரணி, ராதா யாதவ். சினே ராணா, உமா சேத்ரி.
Also Read: LIVE Cricket Score
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025க்கான இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரேணுகா சிங் தாக்கூர், அருந்ததி ரெட்டி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), கிராந்தி கவுட், அமன்ஜோத் கவுர், ராதா யாதவ், ஸ்ரீ சாரணி, சினே ராணா, உமா சேத்ரி.