அபாரமான கேட்சைப் பிடித்து ரசிகர்களை வியக்கவைத்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் - காணொளி!

Updated: Sat, Mar 15 2025 22:10 IST
Image Source: Google

மும்பையில் நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதனையடுத்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம் கடந்து அசத்தியதுடன் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 66 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய நாட் ஸ்கைவர் பிரண்ட் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் பெரிதளவில் சோபிக்க தவறினர். 

அதேசமயம், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மரிஸான் கேப், ஜெஸ் ஜோனசன் மற்றும் நல்லபுரெட்டி சரணி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் பிடித்த கேட்ச் ஒன்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

அதன்படி இன்னிங்ஸின் 5ஆவது ஓவரை டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் மரிஸான் கேப் வீசிய நிலையில், ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட யஷ்திகா பாட்டியா பவுண்டரி அடிக்கும் முனைப்பில் டிரைவ் ஷாட்டை விளையாடிய நிலையில், அப்போது 30 யார்ட் வளையத்திற்குள் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் அபாரமான டைவை அடித்ததுடன் கேட்ச் பிடித்தும் அசத்தினார். 

இதனால் இப்போட்டியில் 8 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் யஷ்திகா பாட்டியா தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பிடித்த இந்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் இலக்கை நோக்கி விளையாடி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 15 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மும்பை இந்தியன்ஸ் மகளிர் பிளேயிங் லெவன்: யாஸ்திகா பாட்டியா, ஹீலி மேத்யூஸ், நாட் ஸ்கைவர்-பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர்(கேப்டன்), சஜீவன் சஜனா, அமெலியா கெர், அமன்ஜோத் கவுர், ஜி கமாலினி, சமஸ்கிருதி குப்தா, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்

Also Read: Funding To Save Test Cricket

டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் பிளேயிங் லெவன்: மெக் லானிங் (கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெஸ் ஜோனசென், ஜெமிமா ரோட்ரிக்ஸ், அனபெல் சதர்லேண்ட், மரிஸான் கப், சாரா பிரைஸ், நிகி பிரசாத், மின்னு மணி, ஷிகா பாண்டே, நல்லபுரெட்டி சரணி

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை