மகளிர் பிரீமியர் லீக் 2023: மார்ச் 4ஆம் தேதி தொடக்கம்!

Updated: Tue, Feb 07 2023 11:28 IST
Women's Premier League to begin on March 4 in Mumbai! (Image Source: Google)

ஆடவருக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி 2008ஆம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக வீறுநடை போட்டு வருகிறது. இதே போல் மகளிருக்கான ஐபிஎல் போட்டி நடத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் மகளிருக்கான முதலாவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கு 'மகளிர் பிரீமியர் லீக்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 5 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த 5 அணிகளின் ஏலம் மூலமாக பிசிசிஐ 4669.99 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 

இந்நிலையில் இந்த மகளிர் பிரிமீயர் லீக் எப்போது தொடங்கும் என்ற விவரத்தை ஐபிஎல் சேர்மன் அருண் துமால் தெரிவித்துள்ளார். இது தொடரபாக அவர் கூறும்போது, ‘மகளிர் பிரிமீயர் லீக் மார்ச் மாதம் 4ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை மும்பையில் தொடங்குகிறது. வருகிற 13ஆம் தேதி வீராங்கனைகள் ஏலம் மும்பையில் நடைபெறுகிறது.

ஒவ்வொரு அணியும் தலா 15 வீரர்கள் முதல் 18 வீரர்கள் வரை ஏலத்தில் எடுக்கலாம். அணியில் மொத்தம் 5 வெளிநாட்டு வீராங்கனைகளை தேர்ந்தெடுக்கலாம், அந்த 5 பேரில் 1 அசோசியேட் வீராங்கனையை தேர்வு செய்யலாம். மொத்தம் 22 போட்டிகள்

நடைபெறும். புள்ளிபட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களை பிடிக்கும் அணிகள் தங்களுக்குள் மோதி அதில் வெற்றி பெறும் அணி இறுதிபோட்டிக்கு முன்னேறும்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை