மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: விண்டீஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு குரூப் ஏ பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் முன்னேறி அசத்தின.
இத்தொடரின் முதல் அரையிறுதிப்போட்டில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று அசத்தியதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது. இந்நிலையில் இத்தொடரில் நடைபெறும் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தியது. ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ஜார்ஜிய பிளிம்மர் மற்றும் சூஸி பேட்ஸ் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையி, சூஸி பேட்ஸ் 26 ரன்னிலும், அடுத்து களமிறங்கியா அமெலியா கெர் 7 ரன்னிலும் என் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜார்ஜியா பிளிம்மரும் 33 ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.அதன் பின் இணைந்த கேப்டன் சோஃபி டிவைன் - புரூக் ஹாலிடே ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் ஹாலிடே 18 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சோஃபி டிவைனும் 12 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
இறுதியில் இஸபெல்லா காஸ் 20 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணியானது 9 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்களை மட்டுமே சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக டியான்டிரா டோட்டின் 4 விக்கெட்டுக்களையும், அஃபி ஃபிளெட்சர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஹீலி மேத்டூஸ் - கியானா ஜோசப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜோசப் 12 ரன்னிலும், மேத்யூஸ் 15 ரன்னிலும் விக்கெடை இழந்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் களமிறங்கிய டியான்டியா டோட்டின் ஒருபக்கம் அதிரடியாக விளையாட, மறுபக்கம் விளையாடிய ஹீலி மேத்யூஸ் 13 ரன்னிலும், அலியா 4 ரன்னிலும் ஆட்டமிழக்க, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டியான்டியா டோட்டினும் 33 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் மற்ற வீரங்கனைகளும் சோபிக்க தவற, விண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்களை மாட்டுமே எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் இடன் கார்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் நியூசிலாந்து மகளிர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.