மகளிர் உலகக்கோப்பை: ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

Updated: Thu, Feb 10 2022 14:33 IST
Image Source: Google

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் மார்ச் மாதம் முதல் நியூசிலாந்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. 

இந்நிலையில் மகளிர் உலகக்கோப்பை தொடருக்கான ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அணியில் டாமி பியூமண்ட், எம்மா லேம்ப், நாட் ஸ்கைவர் போன்று நட்சத்திர வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். 

இங்கிலாந்து மகளிர் அணி: ஹீதர் நைட் (கே), டாமி பியூமண்ட், கேத்ரின் ப்ரண்ட், ஃப்ரேயா டேவிஸ், சார்லி டீன், சோபியா டங்க்லி, கேட் கிராஸ்,சோஃபி எக்லெஸ்டோன், டாஷ் ஃபரன்ட், ஆமி ஜோன்ஸ், எம்மா லாம்ப், நாட் ஸ்கைவர், அன்யா ஷ்ரப்சோல், லாரன் வின்ஃபீல்ட்-ஹில், டேனி வியாட்.

கூடுதல் வீராங்கனைகள்: லாரன் பெல், மேடி வில்லியர்ஸ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::