WCWC 2025: அலிசா ஹீலி தலைமையில் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

Updated: Fri, Sep 05 2025 20:30 IST
Image Source: Google

Australia Womens Squad: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள நிலையில், சோஃபி மோலினக்ஸ் மற்றும் ஜார்ஜியா வேர்ஹாமுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தவுள்ளது. முன்னதாக இத்தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்காகது, இந்திய-பாகிஸ்தான் எல்லை பதற்றம் உள்ளிட்ட காரணங்களினால் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட மறுப்பு தெரிவித்தது.

இதன் காரணமாக பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் பொதுவான இடத்தில் நடத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்சமயம் ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடருக்கான மைதானங்களை சமீபத்தில் அறிவித்தது. இதில் பாகிஸ்தான் மகளிர் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் ஒவ்வொரு அணியும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் தற்போது ஆஸ்திரேலிய மகளிர் அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அணியின் கேப்டனாக அலிசா ஹீலி நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியில் இருந்து விலகிய இருந்து ஹீலி தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளர். இதுதவிர சோஃபி மோலினக்ஸ், ஜார்ஜியா வேர்ஹாம் ஆகியோருக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, பெத் மூனி, எல்லிஸ் பெர்ரி, அனபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வோல், தஹ்லியா மெக்ராத், மேகன் ஷட் உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகளும் அணியில் அங்கம் வகிக்கின்றனர். 

Also Read: LIVE Cricket Score

ஒருநாள் உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி: அலிசா ஹீலி (கேப்டன்), டார்சி பிரவுன், ஆஷ்லீ கார்ட்னர், கிம் கார்த், கிரேஸ் ஹாரிஸ், அலனா கிங், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், தஹ்லியா மெக்ராத், சோஃபி மோலினக்ஸ், பெத் மூனி, எலிஸ் பெர்ரி, மேகன் ஷட், அன்னாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வால் மற்றும் ஜார்ஜியா வேர்ஹாம். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை